முகப்பு
தமிழ்நாடு

ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன்(32). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வந்தார்.

இந்த நிலையில், அவர் ஒகேனக்கல்லில் உள்ள சினி அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி அருவித் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு, மீட்புத்துறையினர், பரிசல் ஓட்டிகள் ஆகியோரின் உதவியுடன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாயக்கண்ணனை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →