ஸ்ரீவில்லிபுத்தூரில் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்கள் இருவர் போலீஸில் பிடிபட்டனர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு, வீட்டு உரிமையாளர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்களில் இருவர் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை பிடிபட்டனர்.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்கள் இருவர் போலீஸில் பிடிபட்டனர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு, வீட்டு உரிமையாளர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்களில் இருவர் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை பிடிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு, வீட்டு உரிமையாளர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்களில் இருவர் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை பிடிபட்டனர்.
அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலையை ஒட்டியுள்ள கோட்டைத்தலைவாசல் தெருவில் குடியிருந்து வருபவர் மாரிக்கனி (60). இவர் ஓய்வு பெற்ற அரசு தணிக்கையாளர். இவரது மனைவி அமுதா. இவர் கிருஷ்ணப்பேரி காமாக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இருவர் மட்டுமே வீட்டில் உள்ளார்கள். 5-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல கதவை திறந்துள்ளார்கள். அமுதா திறந்து உள்ளே சென்று, சமையல் அறையில் இருந்துள்ளார். மாரிக்கனி பின்னால் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி ஒளிந்திருந்த 3 கொள்ளையர்கள் மாரிக்கனியுடன் சேர்ந்து வீட்டினுள் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் கதவைப் பூட்டிவிட்டு, மாரிக்கனியை நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துள்ளார்கள். இது சமையல் அறையில் இருந்த அமுதாவிற்கு தெரியவில்லை.
பின்னர் அமுதாவிடம் சென்ற கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த செயின், தோடு, பீரோவில் இருந்த நகைகள் என 51 பவுன் நகைகளை எடுத்துள்ளனர். மேலும் ரொக்கப் பணம் ரூ.1.40 லட்சத்தையும் எடுத்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். கார்டை கொள்ளையர்கள் கேட்டுள்ளார்கள். அதனை அமுதா கொடுத்துள்ளார். வீட்டில் மாரிக்கனியை இரு கொள்ளையர்கள் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். மாரிக்கனியின் இரு சக்கர வாகனத்தில் ஒரு கொள்ளையன், அவரது ஹெல்மட்டை அணிந்து கொண்டு அமுதாவை ஏற்றிக் கொண்டு மாரியம்மன்கோவில் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்றுள்ளார்.
ஏ.டி.எம். மையத்திற்குள் வந்தால் முகம் தெரிந்துவிடும் என்று கூறி, வர மறுத்து வெளியே நின்று கொண்ட கொள்ளையன், அமுதாவை பணம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். அவர் அதிலிருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்து கொள்ளையன் கையில் கொடுத்துள்ளார். மீண்டும் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார்கள். அவர்கள் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொண்டு, இருவர் காலிலும் விழுந்து மூன்று கொள்ளையர்களும் எங்கள் ஆசீர்வதியுங்கள் என்று கூறி ஆசீர்வாதம் பெற்றுவிட்டு தப்பி ஓடி விட்டார்கள்.
கொள்ளையர் முகமுடி ஏதும் அணியாமல், சுமார் 3 மணி நேரம் அவர்களோடு இருந்துள்ளார்கள். மூவரின் வயதும் சுமார் 25 வயதுக்குள் இருக்கும் என்று அமுதா கூறினார். சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடைபெற்றுள்ள இச் சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இச் சம்பவத்தில் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சிவகாசியைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் பிடித்து வந்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொரு நபரை போலீஸார் தேடிச் சென்றுள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகரிலும் இதே பாணியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.