முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் வழிப்பறி

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல வந்து, அவர் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல வந்து, அவர் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி சந்திப்புக்கு முன்னால் உள்ள மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ரெ.வசுமதி (52). இவர் மதுரைக்குச் சென்றுவிட்டு வன்னியம்பட்டி சந்திப்பு பேருந்து நிறுத்தத்திற்கு முந்தை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இவருக்கு முன்னாகச் சென்று வண்டியை நிறுத்தியுள்ளனர். பின்னால் உட்கார்ந்திருந்தவர் இறங்கிச் சென்று வசுமதியிம் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டாராம்.

இது குறித்து வசுமதி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →