முகப்பு
தமிழ்நாடு

இரு விபத்துக்களில் இருவர் உயிரிழந்த வழக்கு: ரூ.30.94 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.30,94,850 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:28 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.30,94,850 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

சுந்தரபாண்டியம், அக்ராஹரத்தில் குடியிருந்து வந்தனர் கதிர்வேல் (36). இவர் கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பாலிடெக்னிக்கில் காசாளராக வேலை செய்து வந்தார். 22.10.11-ம் தேதி நண்பர் கலுசலிங்கம் அய்யனாருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மில் வேன் மோதியதில் கதிர்வேல் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது மனைவி தெய்வாணை (31), மகள் ஆனந்தகலா (6), மகன் ஹ்ரிபாலன் (3) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோரிருமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், ராஜபாளையம் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம், குடும்பத்தாருக்கு ரூ.21,57,850 வழங்க உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு:

விருதுநகர், செவலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கண்ணன் (எ) சிவரத்தினம் (27). இவர் டிராவல்ஸ் பேருந்து டிரைவர். 17.10.2010-ம் தேதி தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நத்தம்பட்டி போலீஸ் சரகம் உப்போடை பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் நண்பர் நந்தகுமாருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் கண்ணன் (எ) சிவரத்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து இவரது மனைவி சந்திரிகா (24), மகள் சுஜிதா (1) மற்றும் பெற்றோர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றம் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், திருச்சி, தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, குடும்பத்தாருக்கு ரூ.9.37 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →