தமிழ்நாடு

"தாலி அறுக்கும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்'

திராவிடர் கழகம் நடத்த திட்டமிட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின்

தினமணி

திராவிடர் கழகம் நடத்த திட்டமிட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ. ஆர். ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் உள்நோக்கத்தோடு இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலை குறி வைத்து இத்தகைய பாதகச் செயலைச் செய்ய துணிந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் 80 சதவீத திருமணமான பெண்கள் தாலி அணிந்திருக்கும் நிலையில் தாலியை அறுப்போம் என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கருப்புச் சட்டையும் மூட நம்பிக்கை தானே?: திருமணமாகி விட்டது என்பதை அடையாளப்படுத்துவதற்காகவே பெண்கள் தாலி அணிகிறார்கள்.

அது  மூட நம்பிக்கை என்றால் திராவிடர் கழகத்தினர் என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக "கருப்புச் சட்டை' அணிவதும் மூட நம்பிக்கை தானே?

தாலி அறுக்கும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT