மங்கலக்கிழார், கணேசனார் சிலைகள் திறப்பு
திருத்தணியில், மங்கலங்கிழார் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
திருத்தணியில், மங்கலங்கிழார் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
மங்கலங்கிழார், மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் குருவவைக் கிழார் கு.மு.கணேசனார் ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா, திருத்தணி அனுமந்தாபுரம் மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை மாணவர் மன்றத் தலைவர் புலவர் ப.கி.பொன்னுசாமி தலைமை வகித்தார். கவிஞர் கவியன்பன் தொகுப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் து. அரிபரந்தாமன், ந. கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மங்கலங்கிழார், கு.மு.கணேசனார் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
அதைத்தொடர்ந்து, "பாமாலை' என்ற நூலை தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலர் கி. தனவேல் வெளியிட்டார்.