முகப்பு
தமிழ்நாடு

சென்னை கன மழை: சமூக வலைத்தளங்களில் குரும்பும், ஆதங்கமும்

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை குறித்து, தனி மனிதனின் கருத்துக்குகளுக்கு வடிகால விளங்கும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கமும், குறும்பும் மிக்க கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை குறித்து, தனி மனிதனின் கருத்துக்குகளுக்கு வடிகால விளங்கும் சமூக வலைத்தளங்களில் ஆதங்கமும், குறும்பும் மிக்க கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சுட்டுரையில் (டூவிட்டர்) மட்டும் கடந்த இரண்டு மணி நேரத்தில் சுமார் 4,500 கருத்துகள் சென்னை மழை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் டூவிட் செய்யப்படும் கருத்துகளில் சென்னை மழை ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

#chennairains என்ற தலைப்பில் பதிவு செய்யப்படும் கருத்துகள் சுவாரசியமாகவும், வேதனையை வெளிப்படுத்துவதாகும் உள்ளன.

புதிதாக ஒரு ஏரியை கட்டமைத்து இப்போது பெய்துள்ள மழை நீரை சேமிததிருந்தால் பல மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் கஷ்டம் இருக்காது என ஒருவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே முழங்கால் நீரில் நின்று கொண்டு, போக்குவரத்து சீர்செய்து வரும் காவலர் ஒருவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வாழ் மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்த படங்களையும், விடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நகரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வருவது குறித்தும், அவ்வழியே செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கைகளும் ஏராளமாக உள்ளன.

பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டுள்ளதால், இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேளச்சேரி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் படகு சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளதாக ஒருவர் படத்துடன் டுவிட் செய்துள்ளார்.

ஆட்டோக்களும், கால்டாக்ஸ்சிகளும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்திய நிலையில், தங்களுடைய இல்லத்துக்கு செல்லுவதற்கு நியாயமான கட்டணம் வசூலித்த ஆட்டோ ஒட்டுநர் குறித்து ஒருவர் சிலாகித்துள்ளார்.

இதுதவிர குறும்பு பதிவுகளுக்கும் இடம் உண்டு. அமேசான் நிறுவனத்தின் ஆள் இல்லா விமானம் மூலம் பொருள்கள் விநியோகிக்கும் உத்தி, தற்போது சென்னைக்கு தேவை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

லெமூரியா கண்டம் போல் வேளச்சேரியும் தண்ணீரில் மூழ்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இது வேளச்சேரி வாசி ஒருவரின் குறும்பு.

இது தவிர ஏராளமான புகைப்படங்களும் பதவியேற்றப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →