மணப்பாறையில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணி தொடக்கம்
மணப்பாறையில் சீகம்பட்டி கிராமத்தில் வயலில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணி துவங்கியது.
மணப்பாறையில் சீகம்பட்டி கிராமத்தில் வயலில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணி துவங்கியது.
மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தில் வயலில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணியை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேட்முகமது தொடங்கி வைத்து பேசும்போது மணப்பாறை வட்டாரத்தில் இந்த ஆண்டு எந்திர முறையில் 600 எக்கரில் நாற்று நடவு பணி நடைபெறவுள்ளது, மேலும் இதற்கு மானியமாக எக்கர் ஒன்றுக்கு ரூ.ஆயிரத்து இருநூறு வழங்கப்படும்.
சம்பா நடவு செய்யும் விவசாயிகள் இதனைப்பயன்படுத்தி எந்திர முறையில் நடவும். இம்முறையில் நடவு செய்வதால் சிம்புகள் அதிகம் உண்டாகி மகசூல் அதிகரிக்கின்றது. மேலும் ஒரே சீரான இடைவெளியில் நடவு செய்வதால் பயிருக்குத்தேவையான உரசத்துக்கள் சூரிய வெளிச்சம், காற்றோட்டம் முழுமையாக கிடைக்கின்றது. எலியினால் ஏற்படும் பயிர்ச்சேதம் தவிர்ககப்படுகின்றது என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் காசிவிஸ்வநாதன் உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன், சிவக்குமார், விஜயரத்தினம், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தனமேரி, தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலு, மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.