விருதுநகரில் தனியார் வாகன பழுது நீக்க மையத்தில் தீ விபத்து
விருதுநகர் தனியார் வாகன பழுது நீக்கும் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 12 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
விருதுநகர் தனியார் வாகன பழுது நீக்கும் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 12 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
விருதுநகர் சத்திமூர்த்தி சாலையைச் சேர்ந்தவர் பிரவீன்(40). இவர் இப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் நிலையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம் போல் நிலையத்தை மூடிவிட்டு பணியாளர்கள், உரிமையாளர் ஆகியோர் வீடுகளுக்கு சென்றார்களாம். இந்நிலையில், நள்ளிரவில் பழுது நீக்கும் நிலையத்திலிருந்து புகையாக வெளியே வந்துள்ளது.
Advertisement
அதையடுத்து, பிரவீனுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்து திறந்து பார்க்கையில் தீ மளமள பரவியுள்ளது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்து பக்கத்து குடியிருப்புகளுக்கு பரவவிடாமல் தீயை போராடி அணைத்தனர்.
இந்த திடீர் தீவிபத்தில் பழுது நீக்கம் செய்வதற்கு வந்த 12 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.