முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே காலனி வீடுகளை சரிசெய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

விருதுநகர் அருகே இடிந்து விழும் நிலையில் காலனி குடியிருப்புகளை சரி செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று  கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

Updated On : 5 அக்டோபர், 2015 at 7:04 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:23 PM

விருதுநகர் அருகே இடிந்து விழும் நிலையில் காலனி குடியிருப்புகளை சரி செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று  கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

விருதுநகரை அடுத்துள்ள எரிச்சநத்தம் கிராமம் அருகே அம்பேத்கார் காலனி 60-க்கும் மேற்பட்ட காலனி குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகள் அனைத்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். தற்போது, குடியிருப்புகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அதனால் அங்கு குடியிருக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. தற்போது, மழை பெய்து வருவதால் குடியிருப்பதற்கு இடம் இல்லாமல் தெருக்களில் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட தடவை ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனுக் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரையில் காலனி குடியிருப்புகளை சரிசெய்வதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement

எனவே இதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டி பானையுடன் வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு விரைந்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதையடுத்து கிராம மக்களை சமரசம் செய்து கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்க அனுப்பி வைத்தனர். மேலும், கிராம மக்கள் அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமன் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.