ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுபுகுந்து இளம் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல வந்து, கத்தியைக் காட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுபுகுந்து இளம் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல வந்து, கத்தியைக் காட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல வந்து, கத்தியைக் காட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி பிரியா (21). வீட்டில் இருந்த பிரியாவிடம் இருவர் வந்து தண்ணீர் கேட்டுள்ளார்கள். அவர் உள்ளே சென்று கொண்டு வந்த சமயம், இருவரும் கத்தியைக் காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு, அவர்கள் வந்த லோடு வேனில் தப்பிச் சென்றுவிட்டார்கள்.
இது குறித்து பிரியா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.