முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் இளைஞர் சடலம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் இளைஞர் சடலம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாநகரைச் சேர்ந்தவர் மி.ஜோசப் (51). இவரது மகன் இருதய பிரவீன் (25). திருமணம் ஆகாத இவர் அமல்ராஜ் என்பவர் வீட்டில் தங்கியிருந்து, அவரது காட்டில் கூலி வேலை செய்து வந்தார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து குடும்பத்தாரை பார்த்துச் செல்வாராம். வெள்ளிக்கிழமை இரவு அமல்ராஜூடன் வீட்டிற்கு வந்த இருதய பிரவீன் தந்தையுடன் பேசிச் சென்றுள்ளார்.

சனிக்கிழமை திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு திரையரங்கு அருகே அமல்ராஜ் நின்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் தனது மகனைப் பற்றி ஜோசப் கேட்டுள்ளார். அப்போது அமல்ராஜ், அவனை நேற்றிலிருந்து காணவில்லை என்று கூறியுள்ளார்.

பல இடங்களில் தேடியதில், மாதாமலையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் காட்டில் உள்ள கிணற்றில் இருதய பிரவீன் சடலம் மிதந்துள்ளது.

இது குறித்து ஜோசப், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →