முகப்பு
தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த பொறியியல் மாணவர் குடும்பத்திற்கு ரூ.24.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் உயிரிழந்த பொறியியல் மாணவர் குடும்பத்திற்கு ரூ.24.66 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

விபத்தில் உயிரிழந்த பொறியியல் மாணவர் குடும்பத்திற்கு ரூ.24.66 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது.

ராஜபாளையம் அருகேயுள்ள கீழவரகுணராமபுரத்தைச் சேர்ந்தவர் ராமையா-பாப்பாத்தி தம்பதியினரின் மகன் சுரேஷ் (21). இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 5.6.11-ம் தேதி தனது நண்பரின் சகோதரியின் திருமணத்திற்காக இரு சக்கர வாகனத்தில் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, துரைச்சாமியாபுரம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த லோடு வேன் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் சுரேஷ் உயிரிழந்தார். சங்கரன்கோவில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சுரேஷின் பெற்றோர் தங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், சிவகாசி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, சுரேஷின் பெற்றோருக்கு ரூ.24.65 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →