முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் : சிக்கன நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்

உலக சிக்கன நாள் விழாவை கடைபிடிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

Updated On : 28 செப்டம்பர், 2015 at 5:50 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

உலக சிக்கன நாள் விழாவை கடைபிடிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி திங்கள்கிழமை கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்விழா அக்.30-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் அதற்கு முன்னதாக அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு பண்புகளை வளர்க்கும் வகையில் கட்டுரைப்போட்டி, நாடகம், நடனம், பேச்சு ஆகிய பல்வேறு போட்டிகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நடத்த வேண்டும். 

Advertisement

அதோடு, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் 3 பேரை தேர்வு செய்து அக்.15-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவர்களுக்கு அக்.30ம் தேதி மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை ஆட்சியரால் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.