புதுவாழ்வு திட்டம் சார்பில் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி
நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வறுமை ஒழிப்பு சங்கங்கங்களுக்கு ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வறுமை ஒழிப்பு சங்கங்கங்களுக்கு ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் சார்பில் சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, நரிக்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 165 ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புதுவாழ்வு திட்டம் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், மாநில சமச்சீர் நிதியின் மூலம் ரூ.5.21 லட்சம் வத்திராயிருப்பு ஒன்றியம் ஆயதர்மம் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கால்நடை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சாத்தூர் ஒன்றியத்தில் நள்ளி கிராமத்தில் ஆயத்த ஆடை தயார் செய்யும் நிறுவனம், வெம்பக்கோட்டை, நரிக்குடி ஒன்றியங்களில் ரூ.29.74 லட்சத்தில் 12 கிராமங்களைச் சேர்ந்த வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ஆட்டோவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதன் அடிப்படையில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுவாழ்வு திட்ட மேலாளர் சண்முகராஜ் தலைமை வகித்தார். இதில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பி.ஆனந்தவள்ளி பங்கேற்று வறுமை ஒழிப்பு சங்க தலைவியிடம் ஆட்டோக்களை வழங்கினார். இதில், அகத்தாகுளம், டி.கடபங்குளம், கொட்டகாச்சியேந்தல், நல்லுக்குறிச்சி, இலுப்பையூர், எழுவணி, கீழக்கொன்றைக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியவதி, உதவி திட்ட மேலாளர் கோகுலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.