கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன? மத்தியக் குழு அறிக்கை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணம் என்ன என்பது குறித்து மத்தியக் குழு அறிக்கை அளித்துள்ளது.
தமிழ்நாடுகடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன? மத்தியக் குழு அறிக்கை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணம் என்ன என்பது குறித்து மத்தியக் குழு அறிக்கை அளித்துள்ளது.
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணம் என்ன என்பது குறித்து மத்தியக் குழு அறிக்கை அளித்துள்ளது.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்தும், வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திய மத்திய ஆய்வுக் குழு இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட, ஆக்ரமிப்புகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் ஆற்றங்கரையோர ஆக்ரமிப்புகள் காரணமாகவே சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
எனவே, ஏரி மற்றும் ஆற்றங்கரையோர ஆக்ரமிப்புகளை அகற்ற மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளும் வெள்ளத்துக்குக் காரணம்.
சென்னை நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்று மத்தியக் குழு வலியுறுத்தியுள்ளது.
வெள்ள பாதிப்புகளை சீரமைக்கத் தேவையான நிதி உதவியை மத்திய அரசு விரைந்து அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை சீரமைக்க தேவையான நிதியுதவியை வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.