கலசலிங்கம் பல்கலை. பேராசிரியர் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ரூ.27 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் உதயகுமாரின் ஆராய்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகம் ரூ.27 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
தமிழ்நாடுகலசலிங்கம் பல்கலை. பேராசிரியர் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ரூ.27 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் உதயகுமாரின் ஆராய்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகம் ரூ.27 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் உதயகுமாரின் ஆராய்ச்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகம் ரூ.27 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறைத் தலைவராக இருப்பவர் டாக்டர் உதயக்குமார் (படம்). இவர் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் அலுமினியம் தயாரிக்கும் ஆலைகளில் வெளியாகும் பாக்சைட் கழிவு மண்ணைப் பயன்படுத்தி புதிய துகள் (மெட்டீரியல்) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆய்வுக் கட்டுரை அனுப்பியிருந்தார்.
இந்த புதிய துகள் மிகவும் எடை குறைவாகவும், அதிக திறனும் வெப்பத்தைத் தாங்கும் சக்தியுள்ளதாயும் இருக்கும். எனவே ஆட்டோமொபைல் தேவைக்கான புதிய உதிரி பாகங்களை செய்வதற்கு இதனைப் பயன்படுத்த இயலும் என கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மத்திய ஆராய்ச்சிக் குழு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் குழு கலசலிங்கம்க பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து, பேராசிரியரின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சிக் கூடங்களையும், சர்வதேச ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டது. பின்னர் இது குறித்த அறிக்கையின் பேரில் புதிய பரிசோதனைக் கருவிகளும், புதிய துகள்களை ஆராய்ச்சி செய்வதற்கான கருவிகளையும், உற்பத்தி செய்தவற்கான கருவிகளையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்து பயன்படுத்துவதற்காக ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சகம் ஆணை அனுப்பியுள்ளது.
மேலும் இந்த ஆராய்ச்சியை மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றும், ஆராய்ச்சியினுடைய தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் உதயகுமார் என்றும், இந்த ஆராய்ச்சிக்கு ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளராக பேராசியர் ஆறுமுகபிரபு இருப்பார் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ஆராய்ச்சி செய்வதற்கு நிதியுதவி பெற்ற பேராசிரியர் உதயகுமாரை, வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.