தமிழ்நாடு

போலீஸின் காதைக் கடித்த போலீஸ்!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் (எஸ்எஸ்ஐ), முதல்நிலைக் காவலருக்கும் இடையே வியாழக்கிழமை ஏற்பட்ட வாழைப்பழ தகராறில் இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.

தினமணி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் (எஸ்எஸ்ஐ), முதல்நிலைக் காவலருக்கும் இடையே வியாழக்கிழமை ஏற்பட்ட வாழைப்பழ தகராறில் இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.

இதில், காவலரின் காதை சிறப்பு உதவி ஆய்வாளர் கடித்து துப்பினார்.

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் ராதா (52). இங்கு ஓட்டுநராக பணியாற்றுபவர் முதல்நிலைக் காவலர் சரவணன் (45).

இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை திருவானைக்காவல் கொள்ளிடம் வாகனச் சோதனைச் சாவடி அருகே ரோந்து வாகனத்தில் சென்றபோது, சரவணன் வாங்கி வைத்திருந்த வாழைப் பழத்தை ராதா எடுத்து வேறு காவலரிடம் தந்துவிட்டாராம்.

இதில் ஆத்திரமடைந்த சரவணன், ராதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.

அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா, காவலர் சரவணனின் காதை கடித்தாராம். பதிலுக்கு சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாவின் கன்னத்தில் பேனாவால் பலமுறை குத்தினாராம்.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பட்டப்பகலில் போலீஸார் அடித்துக் கொண்டதை பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT