முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடுமுதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ' முதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டசத்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சுவாச உதவி சிகிச்சையும் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.