காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டாம்: நல்லகண்ணு பேட்டி
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டாம்: நல்லகண்ணு பேட்டி
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: காவிரி மேலாண்மை வாரியத்தையாமைக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுதுவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை விரைவில் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே தமிழகத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்து வருகிறது
நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 198 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும். அதனை கண்காணித்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.