அமெரிக்க மக்களை குறிவைத்து இயங்கும் வேட்பாளர்கள்: அதிபர் தேர்தல் குறித்து தூதரக அதிகாரி பேச்சு!
நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், வாக்களிக்க உள்ள பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை குறிவைத்து வேட்பாளர்கள் இயங்கி வருகிறார்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரி எரிக் டி லுண்ட் தெரிவித்தார்.
நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், வாக்களிக்க உள்ள பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை குறிவைத்து வேட்பாளர்கள் இயங்கி வருகிறார்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரி எரிக் டி லுண்ட் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக 'பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா (பி.ஐ.ஐ)' அமைப்புடன் இணைந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கையியல் பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை புதன்கிழமை அன்றுநடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெரிக்க தூதரகத்தின் கலாசார விவகாரங்களுக்கான அலுவலர் எரிக் டி லுண்ட் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது;-
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளர்கள் அனைவரும் தகுதியுள்ள வாக்காளர்களிடம் இருந்து வோட்டுகளைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தங்களது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நேரத்தையும், கவனத்தையும் செலவிட்டு வருகிறார்கள்.
இந்திய அமெரிக்க இருதரப்பு உறவு முன் எப்போதையும் விட வலுவான நிலையில் உள்ளது.அதிபர் ஒபாமா மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்த உறவை பலப்படுத்தவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறார்கள்.
ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு என்ற வகையில், அமெரிக்கா எப்பொழுது சட்டபூர்வ குடியேற்றங்களை வரவேற்கிறது. அதன் மூலம் அமெரிக்கா புதிய திறமைகளை கொண்டு, மேலும் வலிமையடைகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தல் தொடர்பாக அமெரிக்க தூதரகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.