ஆளுநர் கிரண்பேடி உத்தரவு: நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீண்டும் பணியில் சேர்ந்தார்
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நகராட்சி ஆணையர் சந்திர சேகரன் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நகராட்சி ஆணையர் சந்திர சேகரன் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.
அதிமுக எம்எல்ஏ கொண்டுவந்த உரிமை மீறல் பிரச்னை காரணமாக, சந்திர சேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: சந்திரசேகரனை ஆணையர் பதவியில் தொடர கிரண் பேடி அறிவுறுத்தல்
அவருக்கு பதிலாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசனுக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே சந்திர சேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆணையராக சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் படிக்க: புதுச்சேரி நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவு
மேலும் படிக்க: நகராட்சி ஆணையர் மாறுதல் விவகாரம்: ஆளுநர் கிரண் பேடி கண்டனம்