அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ்
வருமான வரித் துறை சோதனைக்குள்ளான சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ்
வருமான வரித் துறை சோதனைக்குள்ளான சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: ஊழல் செய்து கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடத்தப்படும் வருமானவரித் துறை சோதனை வரவேற்கத்தக்கது.
ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள வருமான வரிச் சோதனை, இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் பற்றிய உரிய விளக்கத்தை மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வருமானவரித் துறை சோதனைக்கு உள்ளான விஜயபாஸ்கரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ராமதாஸ்: தமிழகத்தில் பதவியில் உள்ள அமைச்சரின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்துவது அண்மைக் காலத்தில் இதுவே முதல்முறையாகும். வாக்குக்கு பணம் தருவதற்காக ஊழல் செய்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு துணை நின்ற சுகாதாரத் துறைச் செயலாளர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.