தமிழ்நாடு

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா புஷ்பா பாராட்டு

DIN

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள தேர்தல்  ஆணையத்திற்கு ஆணையத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிரடியான முடிவு குறித்து அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறுகையில்,

இந்த தேர்தல் நியாயமான முறையில் கையாளப்படவில்லை. தொடர்ந்து பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அதுமட்டுமல்லாமல், வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் தலையிட்டு இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். மேலும், இந்தியா மீண்டும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துவிட்டது என்று பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT