முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2017, 4:17 pm IST
பகிர்:

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். முதலில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

Advertisement

Advertisement

ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

இவ்வாறு செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.