முகப்பு
தமிழ்நாடு

வருமான வரி சோதனைக்கு யாரும் பயப்படவில்லை: தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித் துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை என தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Updated On : 21 ஏப்ரல், 2017 at 1:24 AM
பகிர்:

வருமான வரித் துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை என தமிழக நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தினகரன் சார்ந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம்.
இனி கட்சியிலும் ஆட்சியிலும் தினகரன் குடும்பத்தினர் தலையீடு இருக்காது. ஓ.பி.எஸ்சிடம் ஒரு சில எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் யாரும் இல்லை. வருமான வரித் துறை சோதனைக்கு அமைச்சர்கள் யாரும் பயப்படவில்லை. தினகரன் சொல்வது போல் அமைச்சர்கள் எதற்கும் பயப்படவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி இந்த நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்போம்.
ஓபிஎஸ் அணியுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். பேச வருவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. தொண்டர்களின் மன ஓட்டத்தையே நான் பிரதிபலித்தேன். அதை ஓ.பி.எஸ். தங்களது வெற்றி என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார் ஜெயக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.