தமிழ்நாடு

ஆளுநருடனான மோதலை விடுத்து ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்: புதுவை முதல்வருக்கு எச்.ராஜா அட்வைஸ்

DIN

புதுச்சேரி: புதுவை துணை நிலை ஆளுநருடனான மோதல் போக்கை முதல்வர் நாராயணசாமி கைவிட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் அரசியல் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி பாஜக கவலைப்பட தேவையில்லை. அதிமுகவின் பிரச்னை என்பது அவர்களது உள்கட்சி விவகாரம்.
டிடிவி.தினகரன் கைது சம்பவத்தில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டு, இன்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போல நாடகமாடி வருகிறது.

யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. எனவே, முதல்வர் நாராயணசாமி ஆளுநருடனான மோதல் போக்கைக் கைவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் எச்.ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT