முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:24 PM
பகிர்:

நாகர்கோவில்: ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகர்கோவிலில் அவர் செய்தியாளரப்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது மாநில அரசு. கழகங்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கிறது.

தமிழகத்தை இந்த நிலைக்கு ஆக்கியதில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. விவசாயிகள் விவகாரத்தில் உண்மையான நிலையை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்யும்.

தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்தி எழுதும் திட்டத்தை திமுக. கொண்டுவந்தது என நான் ஆதாரபூர்வமாக காட்டிவிட்டேன். ஹிந்தியை எதிர்க்கும் திமுக அதற்கு ஆதாரபூர்வமாக பதில் சொல்லத் தயாரா? ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

1967 இல் மொழியை சொல்லித்தான் திமுக.வினர் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த ஆட்சியில் 13 தமிழ் அமைச்சர்களைக் கொண்டிருந்த திமுக என்ன செய்தது? ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருமுறையாவது இதுபற்றி பேசியிருக்கிறாரா?

தில்லியில் நடந்த போராட்டம் விவசாயிகளுக்காக நடந்தது அல்ல, அது அரசியல் போராட்டம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →