முகப்பு
தமிழ்நாடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 மாடிக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள 10 மாடி கட்டட வணிகவளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:34 PM
FIREACCIDEN
பகிர்:

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள 10 மாடி கட்டட வணிகவளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கட்டடத்தின் 8வது தளத்தில் செயல்பட்டு வரும் தனியார் விசா வழங்கும் நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →