முகப்பு
தமிழ்நாடு

பதவியை ராஜிநாமா செய்யத் தயார்: கூட்டாக அறிவித்த மூன்று தமிழக எம்.எல்.ஏக்கள்!

மக்கள் போராட்டத்தினை மதிக்காவிட்டால், தங்கள்  பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று அதிமுகவின் சின்னத்தில் நின்று ஜெயித்த மூன்று எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

கதிராமங்கலம்      மக்கள் போராட்டத்தினை மதிக்காவிட்டால், தங்கள்  பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று அதிமுகவின் சின்னத்தில் நின்று ஜெயித்த மூன்று எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.

தஞ்சை அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  போராடும் பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அந்த கிராமத்திற்கு அதிமுக சின்னத்தில் நின்று ஜெயித்த எம்.எல் .ஏக்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் சென்றிருந்தனர்.

மக்களை சந்தித்த பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது:

பொதுமக்களின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இந்த போராட்டத்தினை அந்த நிறுவனமும்,மத்திய அரசும் மதிக்கவில்லையென்றால் எங்களது பதவியை ராஜிநாமா செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.     

முழு கட்டுரையைப் படிக்க →