முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் அஞ்சலி !

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 16 பிப்ரவரி, 2017 at 6:18 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். 

தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பதவியேற்றார்.அவருடன் 30 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதற்குப் பிறகு சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று முதலில் அங்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.   

Advertisement

பின்னர் அருகிலிருந்த எம்.ஜி.,ஆர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கும் சென்ற பழனிசாமி  அங்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் சக அமைச்சர்கள் மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.