பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம்?
ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடுபெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம்?
ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் சில நாட்களாக நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பதவியேற்றார்.
பதவியேற்ற 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை புதிய அரசு நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டிருந்தபடி பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மறுநாள் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று அரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.