முகப்பு
தமிழ்நாடு

கட்சிப் பணிகள் குறித்து அதிமுக தலைமையகத்தில் சசிகலா ஆலோசனை

அதிமுக தலைமையகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலர் சசிகலா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 4 ஜனவரி, 2017 at 10:55 AM
பகிர்:


சென்னை : அதிமுக தலைமையகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலர் சசிகலா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

10 நிமிடங்களில் நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேராக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு வந்தனர்.

அங்கு, அதிமுக பொதுச் செயலர் சசிகலாவும் பங்கேற்க வருகை தருகிறார். கட்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.