எம்.ஜி.ஆர் துவக்கிய கட்சி உடைந்து போக கூடாது: எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா பேட்டி!
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் துவக்கிய அதிமுக என்னும் கட்சி உடைந்து போக கூடாது என்று எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் துவக்கிய அதிமுக என்னும் கட்சி உடைந்து போக கூடாது என்று எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கப்பட்ட அதிமுக என்னும் கட்சியானது கருத்து வேறுபாடுகளால் உடைந்து விடக் கூடாது. கட்சியை காப்பாற்றும் வகையில் தற்போது பொது செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்தெடுக்கபட்டுள்ளார். அவருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாரோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம். தொண்டர்கள் கருத்தே எங்கள் கருத்து. எனவே எந்த காரணம் கொண்டும் கட்சி உடைவதோ, கொடி மற்றும் சின்னம் முடக்கப்படுவதோ நடக்கக் கூடாது. எம்.ஜி.ஆரின் ஆசை நிறைவேற்றபட வேண்டும்.
Advertisement
சசிகலா தற்போதுதான் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் அவகாசம் உள்ளது. அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை அதன் பிறகே கணிக்க வேண்டும்.
சசிகலாவை நாங்கள்தான் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்துள்ளோம். இதில் எந்த விதமான வதந்திகளுக்கும் இடம் இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எங்களுக்கு ஏந்த விதமான சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக தீபா கூறுவதெல்லாம் அவருடைய தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு சுதா தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.