தமிழ்நாடு

கமல்ஹாசன் மீது நமது எம்ஜிஆர் நாளிதழில் கடும் விமர்சனம்

DIN

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது தொடர்ந்து புகார்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் மீது அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழ் "நமது எம்ஜிஆர்" -இல் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சித்ரகுப்தன் எழுதியுள்ள கவிதை பகுதியில், திமுகவின் தயவில், எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை வன்மமான வார்த்தைகளால் வசைபாடித் திரிவதாக கமல்ஹாசன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு பெரியாரிஸ்ட் வேஷம் போடுவதாக கமல்ஹாசனை விமர்சித்துள்ள நமது எம்ஜிஆர் நாளிதழ், சேரி பிஹேவியர் என்பதில் தவறென்ன எனக்கேட்டு சாதிக்கு ஆலவட்டம் வீசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன் என தமிழர்களின் உரிமை சார்ந்த விஷயம் என்றால், கமல்ஹாசன் மவுனம் சாதிப்பது ஏன் என்றும் நமது எம்ஜிஆர் நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஊழல் புகார் அளிக்கும்படி ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டதன் எதிரொலி. தமிழக அரசின் இணையதளத்தில் முதலமைச்சர், அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் திடீர் மாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT