தமிழ்நாடு

கமல்ஹாசன் அறிக்கை எதிரொலியால் அமைச்சா்களின் இணையதள முகவரிகள் நீக்கப்படவில்லை: சி.வி.சண்முகம் பேட்டி

DIN


சென்னை: நடிகர் கமல்ஹாசன் அறிக்கை எதிரொலியால் இணையத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகள் நீக்கப்படவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் மற்றும் ஆளும் கட்சியினரிடையேயான கருத்து மோதல் முற்றிய நிலையில் அமைச்சர்கள் ஊழல் குறித்த புகார்களை கமல் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்தனா். இதற்கு பதில் அளித்த நடிகா் கமல் மக்களே அரசின் ஊழல் குறித்த புகார்களை மின்னஞ்சல் முகவரி (இணையதளம்) வாயிலாக உங்களுக்கு தெரிவிப்பார்கள் நான் ஏன் இடையில் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், அமைச்சர் கேட்டுக்கொண்டதற்காக ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் இந்த அரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்” என்று கூறிய கமல்ஹாசன், http://www.tn.gov.in/ministerslist என்ற இணையதள முகவரியையும் வெளியிட்டார்.

இதனையடுத்து கமல் கூறிய சில மணி நேரங்களிலேயே, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ http://www.tn.gov.in இணையதள முகவரியில் சென்று பார்த்த பலரும், அதில் அமைச்சர்களின் எந்த தொடர்பு விவரங்கள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதில், அமைச்சர்களின் இணையதள முகப்பு பக்கங்களில் இருந்த இ-மெயில் முகவரிகள் அழிக்கப்பட்டிருந்தன. அதே வேளையில் தமிழக சட்டப்பேரவை இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில் முகவரிகள் அப்படியே இருந்தன.

இந்நிலையில், தமிழ சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கமல்ஹாசன் சொன்னதால் இணையத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகள் நீக்கப்படவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்களை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்புக் கொள்ளலாம் என்றும் அதிமுக இரு அணிகள் இணைய வேண்டும் என்பதையே விரும்புகிறோம். இரு அணி இணைப்புக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT