FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓமலூர் அருகே பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

ஓமலூர் அருகே நாராயண்பாளையத்தில் ஓடும் தனியார் பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஓட்டுநர்களை பொதுமக்கள்

29 ஜனவரி 2024, 8:11 pm IST
பகிர்:

ஓமலூர்: ஓமலூர் அருகே நாராயண்பாளையத்தில் ஓடும் தனியார் பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஓட்டுநர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயண்பாளையத்தில் ஒடும் தனியார் பேருந்தில் தனியாக பயணித்த 15 வயது சிறுமியிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஓட்டுநர்கள், பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே பேருந்திலிருந்து இறங்கி வந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் சிறுமியை அழைத்து விசாரித்தபோது, பேருந்தில் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதையடுத்து பேருந்தில் இருந்த மணிவண்ணன், பெருமாள், முருகன் என்ற 3 ஓட்டுநர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து 3 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments