தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரில் தலைகீழாக பறந்த தேசியக் கொடி

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பறந்தது. முதல்வரின் காரிலேயே தேசியக் கொடி தலைகீழாக பறந்தது மக்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியதுடன், புதிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

புதிச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கடும் மோதல் நிலவிவருகிறது. நாராயணசாமியின் ஆட்சியை கலைக்க, கிரண் பேடி பல விதத்திலும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு வந்த முதல்வர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவினை அறிவிக்கும். துணை நிலை ஆளுநரின் அதிகார வரம்புகளை நெறிமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர் புதுச்சேரி புறப்பட்ட முதல்வர் நாராயணசாமியின் காரில் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறந்தது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT