தமிழ்நாடு

கரிசல் எழுத்தாளர் கழனியூரன் காலமானார்

கரிசல் மண் எழுத்தாளரான கழனியூரன்(63) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) சென்னையில் காலமானார்.

DIN

கரிசல் மண் எழுத்தாளரான கழனியூரன்(63) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான கழுநீர்குளம் கிராமத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீர்குளம் கிராமத்தில் 1954 இல் பிறந்தார் கழனியூரன். அவரது இயற்பெயர் எம்.எஸ். ஷேகுஅப்துல்காதர். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
நெல்லை நாடோடிக் கதைகள், நாட்டுப்புற நீதிக் கதைகள், நாட்டுப்புறத்து நகைச்சுவை கதைகள், வேரடி மண் வாசம், செவக்காட்டு மக்கள் கதைகள், நாட்டுப்புற கதைக் களஞ்சியம் உள்பட 45 நூல்கள் எழுதியுள்ளார். இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி., எழுத்தாளர் கி. ராஜநாராயணன் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களில் கதை சொல்லியின் கதை, நெல்லை நாடோடிக் கதைகள், மண் மணக்கும் மனுஷங்க, செவக்காட்டு மக்கள் கதைகள், நடை வண்டி, காட்டுப் பூவின் வாசம், நாட்டுப்புற நம்பிக்கைகள் போன்றவை முக்கியமான நூல்களாகும். கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் ஏற்பட்ட தொடர்பால் தன்னையும் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டதுடன், கழனியூரன் என்ற பெயரில் எழுதி வந்தார்.
அண்மையில் தினமணி வெளியிட்ட ஈகைப் பெருநாள் மலரில் இஸ்லாமிய நாட்டுப்புறவியல் எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் சந்தோஷ்புரத்தில் மகனுடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு காலமானார்.
அவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். முஹம்மதுஷா என்ற மகனும், பானு என்ற மகளும் உள்ளனர்.
அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான கழுநீர்குளத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு; 98840 37855.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT