சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் காட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என்று ...
தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் காட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என்று ...
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு காட்டமாக கருத்து கூறியுள்ளது.
2015-ஆம் ஆண்டின் மத்தியில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் அப்போதைய தலைமை நீதிபதியின் சேம்பரில் உள்ளே புகுந்து வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோஷம் இட்டனர். அதே போல் ஒரு வழக்கு விவகாரம் ஒன்றின் போது எழுந்த தகராறு ஒன்றில் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்குமிடையே கடும் தகராறு மூண்டது.
இதன் காரணமாக அதிருப்தியடைந்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வானது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி.ஐ.எஸ்.எப் ) பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்கள். அதற்கு ஆகும் செலவை மாநில அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன் பிறகு அந்த வருடம் நவம்பர் 16-ஆம் தேதியில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணியை சி.ஐ.எஸ்.எப் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே பாதுகாப்பு சோதனைகள் தொடர்பாக அவ்வப்பொழுது பிரச்சினைகள் எழுந்து வந்தன.
இதனிடையே சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பால் கனகராஜ் வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி ரமேஷ் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள் கூறிய கருத்துக்களாவது:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு தேவை இல்லை. நீதிமன்ற ஊழியர்கள் ஒரு சிறையிலிருப்பது போன்று உணர்கின்றனர். இது மக்களுக்கான நீதிமன்றம்தான்; ராணுவ நீதிமன்றம் கிடையாது. யார் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்புக்கு உத்தரவிட்டது? மத்திய அரசு இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கி கொள்ளட்டும்.
இவ்வாறு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வானது வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.