ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடுஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி பிவீன் நாயரிடம், மருது கணேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுக முக்கியப் பிரமுகர்கள் சேகர் பாபு, மு.க. தமிழரசு ஆகியோர் இருந்தனர்.
மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடன் அதிக அளவில் திமுக தொண்டர்கள் வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆர்.கே. நகரில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனனும், திமுக தரப்பில் மருது கணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிடுகின்றனர்.