தமிழ்நாடு

ஓபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்பு இல்லை

ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணத்துக்கும் அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

DIN

ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணத்துக்கும் அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
சென்னை கிரீன்வேஸ்சாலை இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 5-ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பயணத்தில் சந்தித்துப் பேச உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் எப்படிச் செயல்பட வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு பன்னீர்செல்வம் அறிவுரை வழங்க உள்ளார். இந்தச் சுற்றுப் பயணத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளோம்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT