முகப்பு
தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே சென்னை- திருவண்ணாமலை அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் பெண் பலி

மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத வகையில் சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:


மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத வகையில் சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். பெண்கள் உட்பட 25 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →