திமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பேட்டி!
திமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சென்னையில் இன்று பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: திமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சென்னையில் இன்று பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக சார்பாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்பொழுது திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் அவரைக் காண அழகிரி சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது கருணாநிதி ஓய்வில் இருந்தபடியினால் அவரது தாய் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து விட்டு திரும்பினார்.
அப்பொழுது செய்தியாளர்க அவரிடம் கேள்வி கேட்க முயன்ற பொழுது, 'தற்பொழுது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள எனக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.