தமிழ்நாடு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: விருப்பம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: தமிழகத்தில் பூரண மது விலக்குக் கொண்டு வரப்பட்டால் அதனை வரவேற்போம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். கிருபாகரன், வி. பார்த்திபன் ஆகியோர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை குடியிருப்புப் பகுதிகளில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்தது.

தமிழக அரசின் முறையீட்டு மனுவை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்கும் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

அதோடு, கூடுதலாக டாஸ்மாக் கடைகளைத் திறப்பது குறித்து கொள்கைகளை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், அதனை உயர் நீதிமன்றம் வரவேற்கும் என்றும் தெரிவித்தனர்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் திறக்கக் கூடாது என்பது உட்பட 3 உத்தரவைகளை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்திருந்தது.

அதாவது டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அமைதியாகப் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ, கைது செய்வதோ கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளால், தமிழகத்தில் மூடப்பட்ட 2000 ஆயிரம் கடைகளைத் திறக்க முடியவில்லை என்றும், அதன் அவசரம் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT