தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தில்லி பயணம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை மதியம் தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுதில்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை மதியம் தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வேளையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பெரும் முயற்சியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மதியம் தில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக நாளை மறுநாள் (புதன்கிழமை) அன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் பெறுவது தொடர்பாக அவர் தில்லி செல்ல உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன