முகப்பு
தமிழ்நாடு

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்:150 பேர் கைது

காங்கிரஸ் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி....

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:34 PM
பகிர்:

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி புதுவை மாநில பாஜக இளைஞரணி சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 150-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளில் புதுச்சேரியை ஆண்ட காங்கிரஸ் கட்சி இளைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. படித்த இளைஞர்கள் 2.4 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மதுப்பழக்கம், குற்றச்செயல்களில் ஈடுபட காங்கிரஸ் அரசு காரணமாக உள்ளது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் எனக்கூறிய காங்கிரஸ் கட்சி இதுவரை யாருக்கும் வேலை தரவில்லை எனவும் திறமையற்ற, ஊழல் நிறைந்த நாராயணசாமி அரசைக் கண்டித்து, பாஜக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காந்தி நகர் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே மாநில தலைவர் சாமிநாதன், இளைஞரணி மாநில தலைவர் விஜய சைலேந்தர் ஆகியோர் தலைமையிலும், காமராஜர் சிலை அருகே மோகன் கமல் தலைமையிலும், வில்லியனூரில் மோகன்குமார் தலைமையிலும், அரியாங்குப்பத்தில் வடிவேல் தலைமையிலும், காரைக்கால் புது பஸ் நிலையம் அருகே செந்தில் அதிபன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில நிர்வாகிகள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150-க்கு மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →