முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி சட்டப்பேரவை: ஆளுநரை பாராட்டி பேசியதால் பல்வேறு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர். அக்கட்சி உறுப்பினர் அசோக் ஆனந்து ஆளுநரை பாராட்டி பேசியதற்கு பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுநர் உரை மீதான விவாதம் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அதன் மீது உறுப்பினர்கள் பங்கேற்று பேசியது:
பேராசிரியர் ராமச்சந்திரன்: மாஹேயில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. பந்தக்கல் கிராமத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும். முதல்வர் இந்த திட்டத்தை செயல்படுத்தி, குடிநீர் பிரச்னையில் இருந்து காக்க வேண்டும். மாஹே அரசு மருத்துவமனயைில் சிறுநீரக சிகிச்சை டயாலிஸிஸ் பிரிவை ஏற்படுத்த வேண்டும். ஆனால் எதனால் இது தடைப்படுகிறது எனத்தெரியவில்லை. இதற்கான இடமும் உள்ளது. 

போக்குவரத்து பிரச்னை உள்ளதால் மினி பஸ் வசதி செய்யவேண்டும். காரைக்காலில் இருந்து மாஹேவுக்கு நேரடியாக பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். 
அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்): 30-ம் தேதி சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கை முடிவடைகிறது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்படும்.

அசோக் ஆனந்து: மாநில ஆளுநர், அரசுக்குக்கு இடையே அதிகாரத்தில் வித்தியாசம் உள்ளது. யூனியன்பிரதேச சட்டப்படி அதிகபட்ச அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு தான் உள்ளது. பதவிக்குரிய மாண்பை காக்கும் வகையில் தான் கிரண்பேடி செயல்படுகிறார். பொது நலவழக்கு போடப்பட்டால் எவரும் பேச முடியும். கிரண்பேடி நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பல்வேறு நல்ல பணிகளை செய்துள்ளார். 1047 கோப்புகளை ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். ஆளுநர் கிரண்பேடியால் புதுச்சேரி தூய்மையாக உள்ளது.

அன்பழகன்: எம்.எல்.ஏக்களை ஆளுநர் மதிக்காமல் செயல்படுகிறார். தில்லி பேரவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் கிரண்பேடி. எம்.எல்.ஏக்களை தரக்குறைவாகப் பேச அவருக்கு என்ன உரிமை உள்ளது.

கொறடா அனந்தராமன்: ஏற்கெனவே ஒரு ஆளுநரை என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விரட்டி அடித்தனர். ஆளுநரை பாராட்டுவதை பேரவைக்கு வெளியில் பேசலாம். 

அமைச்சர் கந்தசாமி: ஆளுநரை பாராட்டி பேசுவது எந்த விதத்தில் நியாயம். 

தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டவர்.

முதல்வர்: துணைநிலை ஆளுநர் தொடர்பாக எந்த கருத்தும் சட்டப்பேரவையில் பேசக்கூடாது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் பேச வேண்டும். வேறு பொருள் குறித்து பேசத் தேவையில்லை. கோப்புகளை ஆளுநர் துரிதமாக அனுப்பினார் என தவறாக கூறக்கூடாது.

அன்பழகன்: நாங்கள் ஆளுநர் குறித்து பேசுவோம். நீங்கள் ஏன் ஆளுநர் முகவர் போல் பேசுகிறீர் என அசோக் ஆனந்தை பார்த்து பேசினார்.

லட்சுமி நாராயணன்: சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறுகிறார். கோப்புகளை திருப்பி அனுப்புவதுன் தான் தேக்கமின்றி அனுப்புவதா. தியாகிகள் ஓய்வூதிய கோப்புக்கு அனுமதி தரவில்லை. மனசாட்சியின்றி ஆளுநர் செயல்படுகிறார்.

முதல்வர் நாராயணசாமி: விவரம் தெரியாமல் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் பேசக்கூடாது. 

அமைச்சர் நமச்சிவாயம்: என்.ஆர் காங்கிரஸ் அரசின்போது எத்தனை ஆளுநர்களை அவர்கள் செயல்படவிட்டார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: இதே ஆளுநர் தான் முந்தைய ஆட்சியில் கடும் நிர்வாக கோளாறு இருநதது எனக்கூறியுள்ளார். பல இடங்களில் அவர் தெரிவித்துள்ளார். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? கிரண்பேடியை எதிர்த்து என்.ஆர். காங்கிரஸ் தான் வெளிநடப்பு செய்தது. ஆளுநர் பற்றி பேசாமல், அவரது ஆளுமை குறித்து பேசுங்கள். பிரச்னைகள் குறித்து பேசுங்கள். வேறு எதையும் குறித்து பேசத்தேவையில்லை.

முதல்வர் நாராயணசாமி: சபையில் இல்லாதவர்கள் குறித்து பேசக்கூடாது.

முதல்வர் நாராயணசாமி: விவாதம் குறித்து பேசாமல் வேறு விஷயம் குறித்து ஏன் பேசுகிறீர்கள்.

அசோக் ஆனந்து: எனது கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன். அவருடன் அக்கட்சி உறுப்பினர்கள் ஜெயபால், சந்திரபிரியங்காவும் வெளிநடப்பு செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →