எரிவாயு உருளை விலை: அரசுக்கு வாசன் கோரிக்கை
சமையல் எரிவாயு உருளைக்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சமையல் எரிவாயு உருளைக்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 18.11 கோடி பேர் மானிய விலையிலும், 2.66 பேர் மானியமில்லா முறையிலும் சமையல் எரிவாயு உருளையை வாங்கி வருகின்றனர். எரிவாயு உருளையின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் மானிய விலையிலான எரிவாயு உருளை விலை ரூ.76 -மும், மானியமில்லா எரிவாயு உருளை ரூ.93 -மும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். எனவே, எரிவாயு உருளையின் விலையை அவ்வப்போது உயர்த்துவதைக் கைவிட வேண்டும். எரிவாயு உருளை உள்பட பெட்ரோலியப் பொருள்களுக்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.