தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்தது உள்ளிட்ட விவகாரங்களால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவர். மேலும் அவர்களிடம் இருந்து விசைப்படகு, வலை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்வர்.

இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் 5 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இலங்கையின் காங்கேசந்துறை கடற்படை தடவாளத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதன்பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அக்டோபர் 25-ந் தேதி வரை 5 தமிழக மீனவர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து,  இந்த 5 மீனவர்களும் வாவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT